சக்திவாய்ந்த விவிலிய ஆய்வு கருவி

"ஆண்ட் பைபில்: பைபில் ஸ்டடி" என்பது Android க்கான சக்திவாய்ந்த, பயன்படுத்த எளிதான, ஆஃப்லைன் விவிலிய ஆய்வுச் செயலி — சாதாரண வாசிப்பிலிருந்து ஆழமான ஆராய்ச்சி வரை, பல்வேறு ஆய்வு பாணிகளுக்கு உதவும் உயர்தர அம்சங்களைக் கொண்ட பல்துறை கருவித்தொகுப்பு. இது வெறுமனே ஒரு வாசிப்புக் கருவி அல்ல — தீவிரமான தனிப்பட்ட ஆய்வுக்கான கருவியாகும்.

விவிலிய வாசகர்களால், விவிலிய வாசகர்களுக்காகவே உருவாக்கப்பட்டது — இலாப நோக்கற்ற, திறந்த மூல சமூகத் திட்டம், முற்றிலும் இலவசம், விளம்பரங்கள் இல்லை.

(இதில் கிடைக்கக்கூடிய பலவற்றில்) புகழ் பெற்ற விவிலிய பதிப்புகளான KJV, NASB, NET, அதோடு மேத்யூ ஹென்றி, ஜான் கில் போன்றவர்களின் விளக்க உரைகள்.

விவிலிய ஆய்வுக்காக சக்தி வாய்ந்த அம்சங்கள்

இதில் உள்ள பல ஆழ்ந்த மற்றும் தனித்துவமான அம்சங்கள், ஆழமான விவிலிய ஆய்வு அனுபவத்தை முன்னெப்போதையும் விட எளிமையாக்குகிறது. குறிப்பிடத்தக்க அம்சங்கள் பின்வருமாறு:

 * மொழிபெயர்ப்புகளை ஒப்பிடவும் விளக்க உறைகளை காண உதவு திரையினை பிரிக்கும் Split text views
 * பல விவிலிய ஆய்வுகளை நடத்த ஏதுவாக தனி அமைப்புகளுடன் Workspaces
 * Strong's ஒருங்கிணைப்பு கிரேக்க மற்றும் எபிரேய பதங்களின் பகுப்பாய்வை எளிமையாக்குகின்றது
 * எந்த இணைப்பையும் தட்டினால், அதனுடன் இணைக்கப்பட்ட குறுக்கு குறிப்புகள், அடிக்குறிப்புகள் மற்றும் விளக்கவுரைகள் (Gill, Matthew Henry etc.) அல்லது குறுக்கு குறிப்புத் தொகுப்புகளை (Treasure of Scripture Knowledge, TSKe) பின்தொடரலாம்.
 * விருப்பத்தேர்வான AI ஆய்வு உதவியாளர் (தாங்களாகவே இணைய வேண்டும் — உங்கள் சொந்த API விசை தேவை): நிறுவிய விளக்கவுரைகள் மற்றும் அகராதிகளை AI உதவியுடன் ஆராயலாம். உள்ளமைந்த அனுமதி அமைப்பு, உதவியாளரின் செயல்பாடுகளில் உங்களுக்கு முழு கட்டுப்பாட்டை வழங்குகிறது.
 * ஒரே நேரத்தில் ஒன்று அல்லது பல விவிலிய மொழிபெயர்ப்புகளில் நெகிழ்வான முழு-உரை தேடல்
 * தனிப்பட்ட ஆய்வுக் குறிப்புகளுடன் மேம்பட்ட புக்மார்க்கிங் மற்றும் அடிக்கோடிடும் சிறப்பம்சங்கள்
 * மறைஉரைகளைக் கேட்கும்போதே குறிப்புகள் எடுக்க ஸ்டடி பேட்கள்.
 * வாசிப்பு மற்றும் மனனப் பயிற்சி கண்காணிப்பு: வாசிப்பு இலக்குகளை அமைக்கவும், முன்னேற்றத்தைக் கண்காணிக்கவும், மற்றும் ஊடாடும் சொற்குழப்பம் (Word Scramble), சொல் வரிசை (Word Order), சொல் மங்கல் (Word Blur), தட்டச்சு (Type It) ஆகிய முறைகள் மூலம் வசனங்களை மனனம் செய்யவும்
 * விவிலியத்தை கேட்கும் அனுபவத்தை மென்மையாக்க ஸ்பீக் புக்மார்க்குகளுடன் கூடிய மேம்பட்ட பேச்சுமுறை உடையது
 * சாதனங்கள் இடையே ஒத்திசைவு: உங்கள் பணியிடங்கள், புக்மார்க்குகள், குறிப்புகள் மற்றும் வாசிப்பு முன்னேற்றத்தை அனைத்து சாதனங்களிலும் ஒத்திசைவாக வைத்திருக்கவும்
 * பலவகை கோப்புகள்: விவிலிய மொழிபெயர்ப்புகள், இறையியல் விளக்கங்கள், அகராதிகள், வரைபடங்கள் மற்றும் கிறிஸ்தவ புத்தகங்கள், மொத்தம் 1500 க்கும் மேற்பட்ட 700 மொழிகளில் உள்ள ஆவணங்கள், Crosswire மற்றும் பிற SWORD களஞ்சியங்களால் விநியோகிக்கப்படுகின்றன.
 * MyBible, MySword மற்றும் EPUB கோப்புகளுக்கான வசதி உங்கள் நூலகத்தை இன்னும் பெருக்க உதவுகிறது.

சிறந்த விவிலிய மென்பொருளினை இணைந்து உருவாக்குவோம்!

ஆண்ட் பைபில் ஒரு திறவூற்று திட்டமாகும். ஆகவே தகுந்த திறனுடைய எவரும் இத்திட்டத்திற்கு பின்வரும் வழிகளில் பங்களிக்கலாம்:

 * புதிய அம்சங்களை உருவாக்குதல்,
 * இன்னும் வெளியிடப்படாத அம்சங்களை சோதனை செய்தல்,
 * இடைமுக மொழிபெயர்ப்புகளை புதுப்பித்த நிலையில் வைத்திருத்தல், மற்றும்
 * பதிப்புரிமையாளர்களிடமிருந்து அனுமதிகளைப் பெறுவதன் மூலம் அல்லது ஆவணங்களை SWORD வடிவத்திற்கு மாற்றுவதன் மூலம் தொகுதி நூலகத்தை நீட்டிக்க உதவுவது.

நீங்கள் ஒரு மென்பொருள் பொறியாளரோ அல்லது சோதனையாளராகவோ இருந்தால், திட்டத்தில் பங்களிக்களாம். எவ்வாறு பங்களிப்பது என அறிய காண்க:  https://git.io/JUnaj.

நிரலாக்க வேலை நேரத்தை வாங்கி இத்திட்டத்தில் பங்களிக்கவும்.

இத்திட்டத்தில் பங்களிக்க நேரமோ திறமையோ உங்களிடம் இல்லையென்றாலும், தொழில்முறை நிரலாக்க வேலை நேரத்தை வாங்குவதன் மூலமும் நீங்கள் திட்டத்தில் பங்களிக்கலாம்.

விருப்பத் தெரிவுகளை காண்க: https://shop.andbible.org/

இணைப்புகள்

 * முகப்பு பக்கம்: https://andbible.org
 * Facebook இல் ஆண்ட் பைபிலை லைக் செய்யவும்: https://www.facebook.com/AndBible/
 * எங்கள் யூடியூப் சேனல்: https://www.youtube.com/c/AndBible
 * அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்: https://git.io/JJm8E
 * கிட்ஹப்பில் திட்ட பக்கம்: https://github.com/AndBible/and-bible